Thursday, July 14, 2016

கொழும்புக்கு போன பெண்...


-மீனாட்சி-

கொ ழும்புக்கு போனா பொம்பள புள்ளைங்க கெட்டு போயிடும். ஆனால் இவன் ஆம்பள என்னவாச்சும் செஞ்சு பொழச்சுக்குவான். குடும்பத்தையும்
நல்லா பார்த்துக்குவான். இந்த வசனங்கள் இன்று நேற்றல்ல தொன்று தொட்டு மலையகத்தில் பெரியவர்கள் கூறிவரும் வழமையான பேச்சாகிவிட்டது. எந்த வகையில் குறித்த பெண் மட்டும் கெட்டுபோகின்றாள் என்பதற்கான காரணம் சொல்லாமலே 21 ஆம் நூற்றாண்டை கடக்க போகின்றோம்.
அதேபோல எப்படியாவது பிழைத்துக்கொள்வான் என்று கூறிய பெரியவர்கள் அவன் எப்படி பிழைப்பை தேடிக்கொள்கின்றான் என்பதையும் தெரிந்து கொள்ளாமல் மடிந்தும் போய்விட்டார்கள்.

அன்றைய சூழலில் பெரியவர்கள் கூறிய விடயம் இன்று எப்படி இருக்கின்றது என பார்த்தால்இ மாற்றம் இருக்கின்றது. அது எப்படியான மாற்றம்? சொந்த
நாட்டின் தலைநகரான கொழும்புக்கு வேலைக்கு அனுப்ப விரும்பாதவர்கள் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புகின்றனர்.

வெளிநாட்டுக்கு பெண்கள் வேலைக்காக செல்வதுபோலவே இன்று மலையகத்திலிருந்து பெண்கள் கல்விக்காகவும் வேலை தேடியும்
பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இது வரவேற்கப்படவேண்டிய ஓர் விடயம் என்றாலும் மாற்றம் ஆபத்தானதாக இருந்துவிடக்கூடாது. அப்படி என்ன ஆபத்து?

குறிப்பாக பெண்களின் வாழ்க்கை நிலை மாற்றம். இன்று மலையகத்திலுள்ள பெண்கள் தேயிலை உற்பத்திஇ இறப்பர் உற்பத்திஇ ஆசிரியர் தொழில்இ ஆடை உற்பத்தி மற்றும் தனியார் துறைகள் என பல்வேறுபட்ட துறைகளில் இருக்கின்றனர். அத்துடன் அரசியலிலும் சிலர் வளர்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட இந்த துறைகளுக்கான பலர் வெளி மாவட்டங்களிலேயே வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு லயன் வீடுகளில் வாழ முடியாது என்ற வளர்ச்சியடைந்த சிந்தனையும் காரணமாக இருக்கின்றது. இந்த வளர்ச்சியடைந்த சிந்தனைக்குள் பல முன்னேற்றம் இருப்பினும் பல சவால்களும் இருக்கின்றன.

மீன் வலை போன்ற ஓர் நெர்ட் ஆடை அவளின் இரண்டு கைகளை மட்டுமே தெரியும்படி செய்தது.நீண்ட கூந்தலை வாரி தலையின் உச்சியில் முனிவர் போல கட்டியிருந்தால். நீண்ட காற்சட்டை அணிந்திருந்தாள். அவள் நுவரெலியா மாவட்டத்திலிருந்து வந்து ஒரு கொமியுனிகேஷனில் வேலை பார்த்துவிட்டு ஒரு கிழமை லீவில் வீட்டுக்கு செல்கிறாள். அவளை அழைத்து போக அவளது அப்பா வந்திருக்கிறார். பஸ் நிலையத்தில் இருவரும் காத்திருக்கிறார்கள். திடீரென அந்த இடத்தில் ஒரு கூட்டம் என்ன என்று பார்த்தால் அது அந்த பெண்ணின் அப்பா இரண்டு வாலிபர்களுடன் சண்டையிடுகின்றார். ஏண்டா என்னுடைய மகளை பாத்துகிட்டு இருக்கீங்க என்மகள் தவிர இந்த இடத்துல எத்தனையோ பேர் இருக்காங்களே என்று பேசுகிறார். ஒரு படியாக அந்த இடம் அமைதியானது.

அந்த பெண்ணுக்கு அங்கு நடந்தவிடயம் சாதாரண விடயமாகவே இருந்தது.
சிறிது நேரம் கழித்து அவளுடைய அப்பா ஏன் அம்மா இப்படி உடுத்திகிட்டு வார நீ கொழும்புக்கு வரும்போது போட்டுக்கிட்டு வந்த சல்வாரி மாறி ஒன்னு போட்டுக்கிட்டு வந்திருக்கலாமே நம்ம ஊருல என்ன வெய்யிலா அடிக்குது மழை தான் அடிச்சு ஊத்துது. குளிரும் வேறு. நீ ஏன் நெட் போட்டுக்கிட்டு
வந்த? நீ மாறியது தப்பு இல்ல இன்னும் இங்க உள்ளவனுங்க மாறவில்லையே. தனியா வந்திருந்த என்ன நடந்திருக்கும் என்று சொல்ல அதற்கு மகள் அப்பா பாக்குறவன் இப்படித்தான் பாப்பான் இதுக்கு சண்டைபோட்டு வேலை இல்ல என்று அந்த இடத்தில் அந்த சம்பாஷணை முடிகிறது. இதில் இன்னும் நவீன ஆடை கலாசாரத்திடை விரும்பாத
தந்தையையும் காலம் மாறும்போக்கில் மாறவேண்டுமென சிந்திக்கும் மகளையும் வளர்ச்சி சிந்தையில் வளைந்து வளராத இளைஞர்களையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அந்த சிந்தனை மட்டுமே இருக்கவேண்டும். இது இன்றும் அங்கிருக்கும் சிந்தனை வெளிப்பாட்டையும் எடுத்துகாட்டுகிறது. அதனை எல்லாம் எதிர்கொண்டு வெளிய வரவேண்டியது குறித்த பெண்ணின் சவாலாக இருக்கிறது.

2016 மே மாதம் வரையான காலாண்டு வரை மாவட்ட ரீதியான வறுமை மட்டம் தொடர்பாக தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொழும்பில் வாழ ஒரு மாதத்திற்கு ஒருவருக்கு நான்கு ஆயிரத்து 197 ரூபாய் செலவாகிறது என தெரிவித்துள்ளது. களுத்துறையில் 4087 ரூபாய் மாத்தளையில் 4055 ரூபாய் நுவரெலியாவில் 4073 பதுளையில் 3870 ரூபாய் ரத்தினபுரியில் 3924 ரூபாய் கேகாலையில் 4077 ரூபாய் தனியொருவருக்கு ஒரு மாதத்துக்கு செலவாகிறது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது கொழும்பில் வாழத்தான் அதிகம் பணம் தேவை இருந்தாலும் இங்கு தான் மலையகத்தை சேர்ந்த பலர் குவிந்துள்ளனர். வியாபார முக்கியத்துவம்வாய்ந்த இடமாக இருப்பதும் தொழில் போட்டி அதிகரிப்பும் இதற்கு காரணமாக இருக்கின்றது.

இருந்தாலும் பெண்கள் மலையகத்தில் வாழ முடியாத நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.பாதுகாப்பான தங்குமிடம் இல்லைஇ தனி வீட்டு திட்டம் ஏழு பேர்ச் காணி என பலத்திட்டங்கள் இருந்தாலும் அவை முடிவடைய இன்னும் பல வருடங்கள் எடுக்கும்.மண்சரிவு இன்னும் ஆபத்தான ஒன்றாகவே மலையகத்தில் இருக்கிறது. தேயிலை மற்றும் இறப்பர் துறையில் வீழ்ச்சி மற்றும் பாதுகாப்பின்மைஇ அரசியல் இலாபத்தால் சம்பள பிரச்சினை இழுபறி என பல விடயங்கள் மலையக பெண்களை அங்கிருந்து வெளியேற்றிக்கொண்டே இருக்கின்றன.

அதேநேரம் கொழும்பில் அதிகளவு மலையக மக்கள் தொழில் நிமித்தம் வாழ்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த இடப்பெயர்வுக்கு மலையக அரசியலும் காரணமாக இருக்கிறது. அது இன்று எத்தகைய மாற்றத்தை கண்டுள்ளது என்று கூறுவதானால் ஒரு அரசியல்வாதி தனக்கு பதவி இருந்தால் மட்டுமே மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யமுடியுமென கையை நகர்த்தி பதவியை பெற முயற்சிக்கிறார். இன்னொருவர் கிடைத்த பதவியை வைத்து செய்யவேண்டியதை செய்யாமல் என்னவோ செய்கின்றார். செய்யாமல் இல்லை. செய்கின்றார். இவர்கள் மக்கள் நலன் சார் தலைவர்களா அரசியல் நலன்சார் தலைவர்களா என்றும் கேட்க தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...