அடுத்த யூகம் நீருக்கான போராட்ட யுகம் என்று சூழலியலார்கள் கூறிவருகின்றனர். அவர்கள் கூறுவதில் உள்ள உண்மைத்தன்மையை நாம் என்றுமே ஆராய்வதில்லை என்றாலும் இலவசமாக கிடைக்கும் நீரை வீண்விரயப்படுத்தாமல் இருக்கலாம். ஏனென்றால் பல இடங்களில் நீர் பணத்துக்கு கூட பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இது வெளிநாட்டில் அல்ல இலங்கையில் தான் இந்த நிலை. இன்று விரயப்படுத்தும் நீரை மிச்சப்படுத்தினால் இன்னுமொருவனுக்கு அந்த நீர் உதவும்.
சுற்றி இயற்கை காடுகள் இருந்தும் அனுராதபுரம் மாவட்டத்தில் கெப்பித்திகொல்லாவ பிரதேச சபைக்குற்பட்ட வாகல்கட கிராமத்துக்கு மட்டும் பலவருடங்களாக நீர் இல்லை. அவர்கள் குடிக்க குளிக்க என தண்ணீரை பெற சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். கர்ப்பிணி தாய்மார் முதல் சிறுவர் பெரியவர்கள் என மொத்த கிராமமும் இவ்வாறு திரிகின்றது.